பதற்றத்தில் SJ சூர்யா - அமைதியான நடிகை பிரியா பவானி சங்கர்
விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற மெகா தொடரில் அறிமுகமாகி, பின் பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். அதன்பிறகு மேயாத மான் திரைப்படம் மூலம் கதாநாயகியாக வெள்ளித் திரையில் நுழைந்தார்.
இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே சூர்யாவும், நடிகை பிரியா பவானி சங்கரும் மான்ஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தனர். தற்போது பொம்மை படத்திலும் இணைந்து நடித்து வருகிறார்கள்.
இவர்கள் இருவரையும் இணைத்து ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. படப்பிடிப்பில் S.J. சூர்யா தனது காதலை தெரிவித்ததா கவும், அதை ஏற்க பிரியா மறுத்து விட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த காதல் கிசுகிசுவை எஸ்.ஜே.சூர்யா மறுத்தார். பிரியா பவானி சங்கர் நல்ல தோழி என்று கூறினார். எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைத்து வெளியான தகவலுக்கு இதுவரை பதில் அளிக்காமல் இருந்த பிரியா பவானி சங்கர் தற்போது முதன் முதலாக விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது:- “எஸ்.ஜே சூர்யாவையும், என்னையும் பற்றி வெளியான வதந்திக்கு நான் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனால் எஸ்.ஜே சூர்யாதான் பதற்றமாகி பதில் சொல்லி விட்டார். அதனாலேயே இந்த விஷயத்தை பெரிதாக பேசினர். நிஜத்தில் எங்களுக்குள் அப்படி எதுவும் கிடையாது.
கிசுகிசுக்களை பார்த்து எனது நண்பர்கள் கேலி செய்வார்கள். அவர்களை எப்படி எதிர் கொள்வது என்ற கவலை மட்டுமே எனக்குள் இருந்தது”. இவ்வாறு பிரியா பவானி சங்கர் கூறினார்.
Priya Bhavani shankar, பிரியா பவானி சங்கர், Priya, bhavani, shankar, பிரியா, பவானி, சங்கர், விதை2விருட்சம், விதைவிருட்சம், மான்ஸ்டர், எஸ்.ஜே. சூர்யா, மேயாத மான், கல்யாணம் முதல் காதல் வரை, S.J. Surya, S.J. Soorya, vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree, seed2tree, Monster, Meyadha Maan, Kalyanam Mudhal Kadhal Varai,