வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவரை காலிசெய்ய 

வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவரை காலிசெய்ய 



தமிழ்நாடு கட்டிடங்கள் சட்டம் 1960, பிரிவு 10/2-யின்படி குடியிருப்பவர் வாடகை கொடுக்காமல் இருப்பது, உள் வாடகை அல்லது மேல் வாடகைக்கு விடுவது, வீட்டு உரிமையாளரை பார்த்து, ''நீ ஓனரே இல்லை'' எனச் சொல்லி உரிமையாளரிடம் தேவையின்றி தகராறு செய்வது, மூன்று மாதங்களுக்கு மேல் வீட்டைப் பூட்டியே வைத்திருப்பது, வீட்டை சேதப்படுத்துவது போன்ற காரணங்களுக்காக குடியிருப்பவரை காலி செய்யச் சொல்ல முடியும்.


தமிழ்நாடு கட்டிடங்கள் சட்டம் 1960, பிரிவு 10/3 –யின்படி வீட்டு உரிமையாளரின் வாரிசுகளுக்கு வீடு தேவை என்றாலோ, தன் சொந்தத் தேவைக்கு வேண்டு மென்றாலோ குடியிருப்பவரைக் காலி செய்யச் சொல்லலாம்.


தமிழ்நாடு கட்டிடங்கள் சட்டம் 1960, பிரிவு  14 பி-யின்படி வீட்டை இடித்துக் கட்ட வேண்டும் என்றால், அவரைக் காலி செய்யச் சொல்லலாம்.


வாடகைக்கு குடியிருப்பவர் சரியாக வாடகை தரவில்லை அல்லது வாடகையே தரவில்லை என்றாலும் வீட்டின் உரிமையாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். வாடகை சரியாக தரவில்லை என்பதற்காக மின்சாரம், தண்ணீர் சப்ளையை நிறுத்துவது சட்டப்படி தவறு. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தே இழப்பீடு பெற முடியும்.


#வாடகை, #வாடகைதாரர், #குடியிருப்பவர், #உரிமையாளர், #நீதிமன்றம், #வழக்கு, #மின்சாரம், #குத்தகை, #முன்தொகை, #அட்வான்ஸ், #தமிழ்நாடு_கட்டிடங்கள்_சட்டம், #சொந்தக்காரர், #விதை2விருட்சம், #Rent, #Tenant, #Owner, #Court, #Case, #Electricity, #Lease, #Prepaid, #Advance, #Tamil_Nadu_Buildings_Act, #Proprietor, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,