உன்னை நீ நம்பு – நம்பிக்கை ஒளி
இந்த மரம்போலத்தான் உங்கள் வளர்ச்சி இருக்க வேண்டும். அதற்கு தேவை நம்பிக்கை என்ற மா மருந்து. உங்களை நம்பி இந்த சமுதாயம் இருக்கிறது. உங்கள் மீது உங்கள் பெற்றோரோ அல்லது உங்கள் ஆசிரியர்களோ நம்பிக்கை வைப்பது பெரிதல்ல. உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வைத்திருக்க வேண்டும் அதுதான் உங்களை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்லும்.
வெற்றிக்காக போராடும்போது நான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை வேண்டும். ஒருவேளை தோல்வியடைந்தால், அந்த தோல்வியை தாங்கும் சக்தி எனக்குள் இருக்கிறது. இந்த தோல்வியை வெற்றியாக்கி காட்டுவேன் என்ற நம்பிக்கை உங்களுக்குள் இருக்க வேண்டும்.
விதை2விருட்சம் சத்தியமூர்த்தி – 9884193081
(பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் நான் பேசியது)
#நம்பிக்கை #வாழ்வியல் #வாழ்க்கை #வெற்றி #சோம்பேறி #உழைப்பாளி, #விதைவிருட்சம், #Hope #Believe #Life #Success #Lazy #Hard_Worker #Hardly_Worker #vidhai2virutcham #vidhaivirutcham.page