காதல் முறிவு – தடுப்பு மருந்தும் சிகிச்சை முறையும் – ஓரலசல்
காதல் என்பது ஓர் உன்னதமான உணர்வு என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் அந்த உன்னதமான காதல் உண்மையான வர்களுக்கு, நேர்மையான வர்களுக்கு வந்தால் அந்த உன்னத காதல், மென்மேலும் மெருகேறும் என்பது நிதர்சனமான உண்மையே!
ஆனால் தற்போதெல்லாம் உன்னத காதலுக்கு இழுக்கு ஏற்படும் வகையில்தான் காதலென்ற பெயரில் வக்கிரங்களும், காம லீலைகளும் அரங்கேறி இந்த சமூகம், மலத்தைவிட பன்மடங்கு துர்நாற்றம் வீசி சீர்கெட்டு போயுள்ளது. இது வேதனை தரும் விடயம்தான்.
காதலுக்கு எதிர்ப்பு என்பது மொழி, சாதி, இனம், மதம் போன்ற வற்றால் வருவது சகஜமானது என்றாலும் அத்தகைய எதிர்புக்களை யெல்லாம் சமாளித்து காதலித்தவரையே கரம்பிடித்து ஆயுள்முழுக்க அன்யோன்யமாக வாழ்ந்து காதலுக்கு பெருமை சேர்த்தவர்கள் வெகு சிலரே. மேற்படி எதிர்ப்புக்கள் அத்தனையும் சமாளித்து, சட்டத்தின் துணையோடு காதலித்தவரை மணந்து கொண்டாலும், அவ்விருவரி டையே உண்டாகும் சிறுசிறு கருத்து மோதல்களும், கருத்து முரண்பாடுகளும் காதலை முறிக்கும் விஷம்.
100% காதல் தம்பதிகளிடையே ஏற்படும் பிரச்சினையைவிட அந்த பிரச்சினையின் போது பிரயோகிக்கப்படும் வார்த்தைகளே முன்னிலை வகித்து காதல் தம்பதிகளிடையான இடைவெளியை விரிசலாக்கி, அந்த விரிசல் நாளடைவில் விரிவடைந்து காதல் முறிவுக்கே காரணமாகி விவாகரத்து வரை சென்று காதலோடு சேர்த்து திருமண உறவையும் முறித்துக் கொள்கின்றனர். இவர்களாவது பரவாயில்லை. தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட தனது இணையரிடம் விவாகரத்து பெற்ற பிறகுதான் வேறு ஒரு திருமணம் செய்து கொள்கின்றனர்.
ஆனால் சிலர் தனது இணையருடன் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே இன்னொரு இணையரிடம் செல்வது எவ்வளவு கீழ்த்தரமானசெயல். அதற்கு பெயர் காதல் அல்ல. கள்ளக்காதல். அந்த கள்ளக்காதலில் திளைப்பவர்களால்தான் பூங்காக்களிலும், கடற்கரைகளிலும், பொழுது போக்கு இடங்களிலும் காமலீலைகளும் வீண் சர்ச்சைகளும் அரங்கேறி நாறி கிடக்கின்றனரே.
உண்மையான காதல் பொதுவாக இனிக்கும் இடையிடையே கசக்கும். ஆனாலும் எப்போதுமே அது இனித்துக்கொண்டே இருக்கும். வெறும் இனிப்பை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருந்தால் எப்படி திகட்டுமோ அதேபோல்தான் காதலித்துக் கொண்டே இருந்தால் அது திகட்டி, காதல்மீதே வெறுப்பினை உண்டாக்கி அதுவே உறவை சீர்குலைத்து விடும். இதே காதலில் சிறுசிறு மோதல்களும் இருக்க வேண்டும். அந்த மோதல்கள் சூரியனைக் கண்ட பனிபோல் காதல் கதிர் படும்போது மோதல் உருகி விட வேண்டும். இல்லை யென்றால் அது விஷம்போல தாக்கி காதலை முறித்து விடும்.
காதலை முறிக்கும் அந்த விஷத்தை முறிக்கும் மா மருந்து எதுவென்றால் அதுதான் விட்டுக் கொடுப்பது, அதைவிட வீரியமான மருந்துகள் எதுவென்றால் அவை மன்னிப்போம் மறப்போம்.
இவை எல்லாவற்றையும்விட காதல் முறிவு ஏற்படாதிருக்க அற்புத மான தடுப்பு மருந்து ஒன்றுண்டு. அது என்னவென்றால், அதுதான் மௌனம். தம்பதியரில் ஒருவர் கோபத்தில் அவர் பேசும் வார்த்தை களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, வார்த்தைக்கு வார்த்தை பதிலடி கொடுக்காமல் குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் வரை அதிகபட்சமாக 60 நிமிடங்கள் வரை மௌனமாக இருந்தாலே போதும். அவர்களின் கோபம் தணிந்து, தானாக வந்து மன்னிப்பு கேட்பதோடு அல்லாமல் காதலும் இன்னும் அதிகமாகும்.
அதேபோல் கோபப்படும்போது கடுமையான வார்த்தைகளை அள்ளி வீசாமல், அந்த கோபமான நேரத்திலும் பொறுமை காத்து, எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தும் இன்னொருவருக்கு உங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை புரிய வைக்க முடியும். அப்புறம் பாருங்கள், கோபம் மறைந்து காதல் மீண்டும் மலரும். மிளிரும். நீங்களே பார்ப்பீர்கள். இந்த ஊரல்ல இந்த உலகமே உங்களை முன்னுதார ணமாக வாழ்க்கையில் எடுத்துக் கொள்ளும் என்பது மறுக்க முடியாத, அதே நேரத்தில் ஏற்றுக் கொள்ளக்கூடிய வாழ்வியல் சிகிச்சைமுறை ஆகும்.
=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி – கைபேசி 98841 93081
#காதல், #காதலி, #காதலன், #ரோஜா, #காதலர்_தினம், #பரிசு, #மௌனம், #விட்டுக்கொடுத்தல், #மறப்போம்_மன்னிப்போம், #தம்பதி, #அன்யோன்னியம், #காமம், #முறிவு, #விவாகரத்து, #நீதிமன்றம், #மாமருந்து, #கள்ளக்காதல், #காதல் முறிவு_தடுப்பு_மருந்தும்_சிகிச்சை_முறையும்_ஓரலசல், #விதை2விருட்சம், #Love, #Lover, #Rose, #Valentines_Day, #Gift, #Silence, #Forgiveness, #Forget, #Couples, #Amnesty, #Lust, #Breakdown, #Divorce, #Court, #Drug, #Counterfeit, #Love_Breakdown_Prevention_and_Treatment, #Ocular, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham #vidhaitovirutcham