நடிகைக்கு காதலர் கொடுத்த அந்த‌ புத்தகம் - நடிகை மகிழ்ச்சி

நடிகைக்கு காதலர் கொடுத்த அந்த‌ புத்தகம் - நடிகை மகிழ்ச்சி



தமிழில் சொன்னால் தான் காதலா மற்றும் லாடம் போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் நடிகை சார்மி. இவர், தமிழ் மட்டுமல்ல‌ தெலுங்கு மொழித் திரைப்படங்களில் மிகவும் பிரபலமான நடிகை. 


இவரும் இயக்குநர் புரி ஜெகன்னாதனும் காதலித்து வருவது ஊரறிந்த செய்தி. மேலும் இவர் தனது காதலரான இயக்குனர் புரி ஜெகன்னாத்துடன் சேர்ந்து, புதிய திரைப்படம் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே அவருக்கு படத்துக் கான ஸ்கிரிப்ட் எழுதும் ஆசை வந்திருக்கிறது. அடுத்து தான் தயாரிக்க உள்ள படத்துக்கு தானே கதை எழுத சார்மி விரும்புகிறார். இது பற்றி தனது காதலர் புரி ஜெகன்னாத்திடம் கூற, அவர், ஸ்டோரி ரைட்டிங் என்ற புத்தகத்தை படிக்க சார்மியிடம் கொடுத்துள்ளார். 


இந்த புத்தகத்தை தான் கடந்த சில நாட்களாக படித்து வருவதாக சார்மி கூறியுள்ளார். சீக்கிரமே ஸ்கிரிப்ட் ரைட்டராக மாற இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.


#லாடம், #நடிகை, #சார்மி, #புரி_ஜெகன்னாத், #ஸ்டோரி_ரைட்டிங், #காதல், #காதலர், #விதை2விருட்சம், #Ladam, #Actress, #Charmi, #Poori_Jagannath, #Story_Writing, #Lover, #Love, #Romance, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree