நடிகை வேதனை - அதுபோன்ற கொடுமை எனக்கும் நடந்துள்ளது 

நடிகை வேதனை - அதுபோன்ற கொடுமை எனக்கும் நடந்துள்ளது 



மணிரத்னத்தின் காற்று வெளியிடை, விஜய் சேதுபதியுடன் விக்ரம் வேதா உள்ளிட்ட மேலும் சில படங்களில் நடித்துள்ளார். க‌டந்தாண்டு வெளியான நேர் கொண்ட பார்வை திரைப்படத்தில் அஜித்துடன் நடித்து  பிரபலமானவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவிய பிறகு உள்நாட்டில் விமான பயணம் இரண்டுக்குமேற்பட்ட முறைகள் மேற்கொண்டதால் தன்னைத் தானே வீட்டில் தனிமைப்படுத்திக் வாழ்ந்து வருகிறார். 


இந்த நிலையில், தான் கல்லூரியில் படிக்கும் போது, பேருந்து பயணத்தில் தனக்கு நடந்த ஒரு மோசமான, கொடுமைகளை சமூக வலைதளம் ஒன்றில் கண்ணீருடன் பகிர்ந்துள்ளார். அவர் தெரிவித்ததாவது;-  


“இணையதளத்தில்  நான் நிர்பயா வழக்கு தொடர்பான ஒரு தொடரை பார்த்து அதிர்ந்து போனேன். பஸ் பயணத்தில் கூட்டத்துக்குள் சிக்கும் பெண்கள் பல கொடுமைகளை தினமும் அனுபவிக்கின்றனர். அதுபோன்ற கொடுமை எனக்கும் நடந்துள்ளது. நான் கல்லூரியில் படித்த காலத்தில் கூட்டமான பஸ்சில் பயணம் செய்தேன். ஒவ்வொரு நாளும் யுத்தத்துக்கு செல்வதுபோலவே இருக்கும். யாராவது சில்மிஷம் செய்வார்களோ என்ற பயமும் இருக்கும். நிர்பயாவைப்போல் நானும் கூட்டம் இருக்கும் பஸ்சை தவிர்க்க தனியார் பஸ்சில் பயணித்து இருக்கிறேன். அந்த தொடரை பார்த்தபோது எனக்கு பழைய சம்பவங்களை நினைத்து பயம் ஏற்பட்டது”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Shraddha Srinath, ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஷ்ரத்தா ஸ்ரீநாத், Shraddha, ஸ்ரத்தா,  ஷ்ரத்தா, விதை2விருட்சம், vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree, seed2tree, 70mmstoryreel,