7 Hiding Secrets - Women from their Husbands (Tamil)

7 ரகசியங்கள் - பெண்கள் அவரவர் கணவர்களிடம் மறைக்கும் ரகசியங்கள் 7



திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் திருப்பத்தை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வாக இருக்கிறது. குறிப்பாக பெண்களின் வாழ்க்கை திருமணத்திற்கு பிறகு நிச்சயமாக அவர்களின் முந்தைய வாழ்க்கைபோல இருக்காது. இதுவரை வாழ்ந்து வந்த சூழ்நிலையில் இருந்து மாறி புதிதாக வேறொரு சூழ்நிலையில் வாழ தொடங்க வேண்டும். அதிலும் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றால் அவர்களின் நிலை மேலும் மோசமாகும்.


இந்த சூழ்நிலையில் எவ்வளவு மகிழ்ச்சியான திருமண வாழ்வை பெண்கள் அனுபவித்தாலும் சில ரகசியங்களை ஒருபோதும் தங்கள் கணவரிடம் கூறமாட்டார்கள் இதுகுறித்து பெண்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் திருமணமான பெண்கள் பொதுவாக தங்கள் கணவரிடம் இருந்து மறைக்கும் சில ரகசியங்கள் என்னவென்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த பதிவில் பெண்கள் கணவரிடம் இருந்து முற்றிலும் மறைக்கும் விஷயங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
 
ஒன்று => பெரும்பாலான இந்திய பெண்கள் தங்கள் கணவரிடம் மறைக்கும் முக்கியமான ரகசியம் இதுதான். கணவர்கள் அனைவருக்கும் இதனை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கும். ஆனால் பெண்கள் இந்த தலைப்பு வரும் போதெல்லாம் அதனை வேறு விஷயம் கொண்டு திசைதிருப்பி விடுவதாக கூறுகிறார்கள். சிலகாலம் வாழ்ந்த பிறகு கடந்த கால உறவுகளை பற்றி கூறுவது தங்களுக்கு பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்துவதாக பெண்கள் கூறுகிறார்கள். தங்களின் கடந்த காலம் நிகழ்கால உறவை பாதிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.


இரண்டு => அனைத்து பெண்களுக்குமே என்னதான் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தாலும் தங்கள் கணவரை தங்களின் முன்னால் காதலனுடன் ஒப்பிட்டு பார்க்கும் பழக்கம் இருக்கும். இது அவர்களின் திருமண வாழ்க்கைக்கு நல்லதல்ல என்று அவர்கள் அறிந்தாலும் அவர்கள் இதனை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் இதனை ஒருபோதும் அவர்கள் தங்கள் கணவரிடம் தெரிவிக்க மாட்டார்கள்.
 
மூன்று => திருமணமான அனைத்து பெண்களுக்குமே கணவரின் அம்மாவோடு நிச்சயம் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். இதற்கு விதிவிலக்காக சிலர் இருக்கலாம்,அப்படி இருந்தால் அது அவர்கள் அதிர்ஷ்டம். ஆனால் பெரும்பாலான பெண்கள் தங்கள் மாமியாரின் மீது கோபம் இருந்தாலும் அதனை மறைத்து ஒரே குடும்பத்தில் மகிழ்ச்சியாக வாழ்வது போல நடிக்கிறார்கள். பெரும்பாலான பெண்கள் தங்களின் இந்த பிரச்சினையை கணவரிடம் மறைக்கத்தான் முயற்சி செய்கிறார்கள்.
 
நான்கு => வேலைக்குச் செல்வது என்பது அனைத்து பெண்களின் அடிப்படை உரிமையாகும். ஆனால் திருமணத்திற்கு பிறகு குடும்பத்தை பராமரிக்கவும், குழந்தைகளை கவனித்துக் கொள்ளவும் பெரும்பாலான பெண்கள் தங்கள் கேரியரை இழக்கிறார்கள். இதனால் அவர்கள் மனதளவில் வருந்தினாலும் குடும்பத்திற்காக அதனை வெளிக்காட்டுவதில்லை. ஆனால் அவர்களின் வீட்டு வேலைக்கான பாராட்டோ, அங்கீகாரமோ கிடைக்காதபோது அவர்கள் தவறான முடிவெடுத்து விட்டமோ என்று நினைக்கத் தொடங்குவார்கள். ஆனால் அதனை கணவரிடம் இருந்து மறைத்து விடுகிறார்கள்.
 
ஐந்து => மாமியார்-மருமகள் சண்டையில் பெரும்பாலும் கணவர் நியாயமே இல்லை என்றாலும் அம்மாவின் பக்கம் நிற்பதை பெண்கள் விரும்புவதில்லை. இது தங்களை குடும்பத்தில் அந்நியராக உணர வைப்பதாக பெண்கள் கூறுகிறார்கள். அவர்களால் ரகசியமாக அழ முடிகிறதே தவிர அதனை எதிர்த்து ஒன்றும் செய்ய முடிவதில்லை.
 
ஆறு => தங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களைப் பற்றி பகிர்ந்து கொள்ள பெண்கள் விரும்புவதில்லை. ஏனெனில் கணவர் அதனை தன்னுடைய தாயிடம் பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது. பின்னாளில் இதுவே தனக்கும் தன குடும்பத்திற்கும் எதிரான ஆயுதமாக பயன்படுத்தப்படலாம் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.
 
ஏழு => இந்தியாவில் பத்தில் ஆறு பெண்கள் மட்டுமே உடலுறவின் போது உச்சக் கட்டத்தை அடைகிறார்கள். மற்ற பெண்கள் உச்சக்கட்ட இன்பத்தை அடைவதில்லை. பெண்களின் உச்சக்கட்டம் என்பது ஆண்களின் உச்சக்கட்டத்தை போன்றதல்ல. தங்களின் உச்சக்கட்டம் பற்றியோ அல்லது கணவரின் பாலியல் திறனை பற்றியோ பெண்கள் கணவரிடம் வெளிப்படையாகக் கூறுவதில்லை. தங்களின் பாலியல் ஆசைகள் பற்றியும் பெண்கள் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதில்லை.


#திருமணம், #கல்யாணம், #இல்லறம், #பாலியல், #உச்சக்கட்டம், #உடலுறவு, #பாலுறவு, #கணவர், #மனைவி, #வேலை, #மாமியார்_மருமகள்_சண்டை, #காதலன், #விதை2விருட்சம், #Marriage, #wedding, #matrimonial, #home, #sex, #orgasm, #sexual_intercourse, #husband, #wife, #job, #mother-in-law, #daughter-in-law, #lover, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #7_Hiding_Secrets_Women_from_their_Husbands_(Tamil), 7_ரகசியங்கள்_பெண்கள்_அவரவர்_கணவர்களிடம்_மறைக்கும்_ரகசியங்கள்_7