டிக்டாக் செயலி புதிய வடிவில்
கடந்த மாதம் இந்திய – சீன எல்லைப்பகுதி கல்வான் என்ற பள்ளத்தாக்கில் இரு நாட்டு படைகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதனால் இரு நாடுகளுக்கிடையே உறவு நிலையில் விரிசல் எழுந்துள்ள நிலையில் சீன செயலிகளை தடை செய்வதாக இந்திய அரசு அறிவித்தது அதிர்ச்சியை உண்டாக்கியது.
டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 மொபைல் செயலிகளை தடை செய்துள்ளதற்கு சீனா வருத்தம் தெரிவித்துள்ளது. இதனால் சீன நிறுவனங்கள் பல பொருளாதார இழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தற்போது அமெரிக்கவும் சீன ஆப்களை தடை செய்ய திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.
எனினும், சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல்களில் இந்தியாவில் டிக்டாக் செயலி புதிய பெயரில் அறிமுகமாகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. உண்மையான டிக்டாக் செயலி தான் தற்சமயம் டிக்டாக் ப்ரோ எனும் பெயரில் வெளியாகி இருப்பதாக வைரல் தகவல்களில் கூறப்பட்டு வருகிறது.
#டிக்டாக், #டிக்டாக்_புரோ, #விதை2விருட்சம், #TikTok, #TikTokPro, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree