ALL ஆசிரியர்தொகுதி அழகு/ஆரோக்கியம் பொது/திரைச்செய்திகள் TV ஆன்மீகம் சட்டங்கள் சமையல் சரித்திரம் உளவியல் கணிணி/கைபேசி
உங்களை நேசிப்பேன் காதலிப்பேன் - நடிகை சாயிஷா 
March 11, 2020 • T.R. SATHYAMOORTHY • பொது/திரைச்செய்திகள்

உங்களை நேசிப்பேன் காதலிப்பேன் - நடிகை சாயிஷா 

க‌டந்த 2017 ஆம் ஆண்டு வெளியான வனமகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சாயிஷா தொடர்ச்சியாக சில திரைப்படங்களில் நடித்து பின் கஜினிகாந்த் என்ற திரைப்படத்தில் ஆர்யாவுடன், சாயிஷா இணைந்து நடிக்கும்போது இருவருக்கிடையே காதல் மலர்ந்தது. இருவீட்டார் சம்ம‍தத்துடன் திருமணமும் செய்து கொண்டு இரண்டாமாண்டில் காலடி வைக்கிறார்கள். இந்நிலையில் ஆர்யாவுடன் தான் கொடுத்துக் கொண்ட நடிகை சாயிஷா திருமண நாளுக்காக டுவிட்டரில் பதிவிட்டிருக் கிறார். 

அதில் அவர் கூறியிருப்பதாவது: முடிந்த வரை அனுசரித்து கொண்டு எல்லா வழிகளிலும் என்னோடு இணைந்து ஒராண்டை சிறப்பாக கடந்த ஆர்யாவுக்கு என்னுடைய வாழ்த்துகள். நீங்கள் இல்லாத வாழ்க்கையை இனி என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. அன்பு, பாசம், அரவணைப்பு, நிலைத்த தன்மை, தோழமை எல்லாமே ஒரே நேரத்தில் உங்களிடம் இருந்து எனக்கு கிடைத்திருக்கிறது. நான் இப்போது மட்டுமல்ல, என்றுமே, உங்களை நேசிப்பேன்; காதலிப்பேன் என உருகி இருக்கிறார்.

#ஆர்யா, #சாயிஷா, #Arya, #Sayyeshaa, #வனமகன், #கஜினிகாந்த், #விதை2விருட்சம், #Vanamagan, #Gajinikanth, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,